
இந்திய ரயில்வே
2023-24 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய ரயில்வே துறைக்கு கிட்டத்தட்ட 1.9 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் இந்திய ரயில்வே துறை நவீனமயமாகும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்தே பாரத் ரயில் திட்டத்திற்கு ஒரு பெரிய அளவிலான நிதி ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் இந்திய ரயில்வே துறையில் கூடுதலாக 500 செமி ஹை ஸ்பீட் ரயில்கள் மற்றும் 35 ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்கள் சேர்க்கப்பட கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

வந்தே பாரத் ரயில்
மத்திய அரசு இரண்டு காரணங்களுக்காக வந்தே பாரத் ரயில் திட்டத்தை வலியுறுத்துகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களை வந்தே பாரத் மாற்றி ரயில் சேவையின் சராசரி வேகம் 180km/h ஆக உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் ஏற்றுமதி
இரண்டாவதாக, வந்தே பாரத் ரயில் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் 2025-26க்குள் ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த ரயில்களை ஏற்றுமதி செய்யும் நிர்வாகம் உள்ளது.

புதிய திட்டங்கள்
இந்தப் பட்ஜெட்டுக்கு வந்தே பாரத் ரயில் தயாரிப்பு திட்டத்தின் விரிவாக்கம் தவிர, புதிதாக 4,000 ஆட்டோமொபைல் கேரியர் கோச்சுகள் மற்றும் 58,000 வேகன்களும் வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டது.

ஹைட்ரஜன் ரயில்கள்
இதேவேளையில் இந்தப் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா மற்றும் காங்க்ரா பள்ளத்தாக்கு ஆகிய எட்டு பாரம்பரியமிக்க வழித்தடங்களில் ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை ஏற்கனவே வெளியிட்டார். இந்தத் திட்டமும், இதற்கான நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்-ல் இடம்பெற வாய்ப்பு அதிகம்.

இந்திய மலை ரயில்கள்
ஹரியானாவில் சோனிபட்-ஜிந்த் பிரிவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும், வடக்கு ரயில்வே வொர்க்ஷாப்-ல் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் முன்மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் போது இந்திய மலைகளில் பயன்படுத்தும் ரயில்கள் பூஜ்ஜிய கார்பன் உமிழும் தன்மை பெறும்.