
புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-ம் ஆண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கூறினார்.
உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐ.நா. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வட்டி விகித உயர்வு முதலீட்டு நடவடிக்கைகளால் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம், சர்வதேச ஏற்றுமதி வளர்ச்சியில் பின்னடைவு உருவாகும். வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும்.
உலகளவில் பொருளாதார சுணக்க நிலையை கருத்தில் கொண்டு வரும் 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2022-ல் மதிப்பிடப்பட்ட6.4 சதவீத வளர்ச்சியை காட்டிலும்0.6 சதவீதம் குறைவாகும். 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி மிதமான வேகத்திலேயே இருக்கும்.
இருப்பினும், 2023-24 இந்தியாவில் வளர்ச்சிவிகிதம் 6 சதவீதமாக இருக்கும் எந்த முந்தைய மதிப்பீட்டில் மாற்றம் எதுவும் இல்லை.
பல்வேறு கடினமான சூழல்களால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தில் 0.4 சதவீத பின்னடைவு ஏற்படும். இதையடுத்து, அவ்வாண்டில் உலகப் பொருளாதாரம் 1.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணும்.
கடந்தாண்டில் 7.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 2023-ல் 5.5 சதவீதமாக குறையும். சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை குறைவு, ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது இறக்குமதிக்கான பணவீக்கத்தை குறைக்க உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.