
சர்வதேச மந்த நிலை
சர்வதேச அளவில் பல்வேறு தலைவலிகள் நிலவி வரும் நிலையில், பல நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் 2021ல் ஏற்றுமதி விகிதமானது 39.3 பில்லியன் டாலராக இருந்தது. எனினும் இது சமீபத்திய மாதங்களாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது குறித்து வர்த்தக செயலர் சுனில் பார்த்வால் செய்தியாளர்களிடம் கூறினார், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமான சரிவானது, உலகளாவிய மந்த நிலைக்கு மத்தியில் உள்ளது.

ஏற்றுமதி விகிதம்
கடந்த நிதியாண்டில் 422 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி விகிதத்தை தொட்ட நிலையில், ஏற்றுமதி விகிதமானது மெதுவாக உள்ளது எனலாம். பல முன்னணி பொருளாதார நாடுகளும் மெதுவான வளர்ச்சியினை சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ந்து பல மாதங்களாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது வேகமாக வளரும் நாடுகள் மீது அதிக கவனம் செலுத்துவதாகவும், தற்போது இந்த ஆண்டில் 470 பில்லியன் டாலர் மதிப்பில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைகள் ஏற்றுமதி அதிகரிக்கலாம்
உலகளவில் மந்த நிலையின் போக்கு உள்ளது. ஆக நாம் சவால்களை எதிர்கொள்ளலாம். எனினும் இந்த ஆண்டுகள் சேவை ஏற்றுமதியானது புதிய உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக துறையால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்கள், சேவைகள் ஏற்றுமதியினை 27. 3 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 5% அதிகமாகும். அதே நேரத்தில் இறக்குமதி விகிதமானது 15.6% ஆக அதிகரித்துள்ளது.

சரக்கு ஏற்றுமதி சரிவு
டிசம்பர் சரக்கு ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவுக்கு எண்ணெய் மற்றும் பொறியியல் பொருட்கள் ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகித்தது. இதில் எண்ணெய் பொருட்கள் 27% குறைந்து, 4.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதே பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியானது 12% குறைந்து, 9.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

தங்கம் இறக்குமதி சரிவு
முதல் 30 ஏற்றுமதி பொருட்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் 37% அதிகரித்து, 2.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே இறக்குமதி சரிவில் க்தங்கம் மற்றும் இரத்தினங்கள் இறக்குமதியானது 75% சரிவினைக் கண்டது. இது மேலும் வரவிருக்கும் மாதத்திலும், தொடர் விலையேற்றத்தால் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வர்த்தக பற்றாக்குறை குறையலாம் வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவினைக் காணலாம்
அதேபோல ஏற்றுமதி விகிதமும் தொடர்ந்து சரிவினைக் காணவே வாய்ப்புகள் அதிகம் எனலாம். உலகளாவிய நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஏற்றுமதி சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுஅரசியல் பதற்றம், தேவை சரிவு, ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.