
இந்திய ஸ்டார்ட்அப் துறை
இந்தியாவில் சீட் ஃபண்டிங் (Seed Funding) அதாவது ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான முதலீட்டைப் பெற்ற நிறுவனங்கள் சீரியஸ் ஈ முதலீட்டைப் பெற திணறி வருகிறது. இதேபோல் நிதி நெருக்கடியில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைப் பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் அதேவேளையில் புதிய மற்றும் கன்ஸ்யூமர் வர்த்தகத்தை மேம்படுத்தும் நிறுவனங்கள் முதலீட்டைப் பெறுகின்றன.

Decacorn நிலை
ஆனால் பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறிப்பாக Decacorn பிரிவில் உள்ள நிறுவனங்களும், Decacorn நிலையை அடைய நெருங்கிய நிறுவனமும் போதுமான நிதி ஆதாரங்களுடன் இருக்கும் போது, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது தான் தற்போதைய பிரச்சனை.

இன்மொபி நிறுவனம்
இந்த இடத்தில் தான் இன்மோபி நிறுவனத்தின் பணிநீக்கம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சாப்ட்பேங்க் நிறுவனத்தின் கூடுதல் முதலீட்டில் இயங்கும் இன்மொபி 50 – 70 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் 2023 ஆம் ஆண்டில் சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்மொபி முடிவு
இன்மொபி நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2600 பேர். மேலும் புதிய ஊழியர்கள் சேர்ப்பில் தேவை இருந்தால் மட்டுமே சேர்க்க முடிவு செய்துள்ளோம், கூடுதல் தேவைக்கோ அல்லது உபரியாகவோ அல்லது எதிர்காலத் தேவைக்காக ஊழியர்களைச் சேர்க்கும் விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இன்மொபி – பார்வை
இன்மொபி இந்த 70 ஊழியர்கள் பணிநீக்கம் தனது கிளை நிறுவனமான Glance நிறுவனத்தையும் சேர்த்த பணிநீக்கம். இன்மொபி 2011 ஆம் ஆண்டில் யூனிகார்ன் நிறுவனத் தகுதியைப் பெற்றது, Glance 2020 ஆம் ஆண்டில் கூகுள் மற்றும் Mithril Capital ஆகிய இரு நிறுவனத்திடம் இருந்து 145 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டிய போது யூனிகார்ன் நிலையை அடைந்தது.

இன்மொபி முதல் ஓலா
2022 ஆம் ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 20000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு முதல் ஓலா, ஸ்விக்கி வரையில் பல நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டன. 2023 ஆம் ஆண்டு டெக் ஊழியர்கள் பணிநீக்கம் மிகவும் அதிகம்.

உலகின் டாப் 4 டெக் நிறுவனங்கள்
இதற்கிடையில் உலகின் டாப் 4 பெரிய டெக் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவங்கி 20 நாள் மட்டுமே ஆன நிலையில் அமேசான் 18000 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 1000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. 2022ல் மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.