
ரோஷினி நாடார்
இன்போசிஸ் டிசம்பர் காலாண்டில் 6586 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றிருந்தாலும், வளர்ச்சி அளவீட்டைப் பார்த்தால் வெறும் 13.3 சதவீதம் தான். ஆனால் ரோஷினி நாடார் தலைமையில் ஹெச்சிஎல் இதே டிசம்பர் காலாண்டில் 20 சதவீதம் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.

ஹெச்சிஎல் டெக்
டிசம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் சுமார் 4,096 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது. அதாவது டிசம்பர் மாதத்தில் காலாண்டின் 90 ஒரு நாளுக்குத் தலா 45 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

ஷிவ் நாடார்
2021 ஆம் ஆண்டு ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான ஷிவ் நாடார் தனது சேர்மன் பதவியில் இருந்து இறங்கி ஹெச்சிஎல் நிர்வாகத்தின் மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பொறுப்பேற்றார். இதன் மூலம் ஹெச்சிஎல் நிர்வாகம் முழுவதும் ஷிவ் நாடாரின் ஓரே மகளான ரோஷினி நாடார் கைக்கு வந்தது.

ரோஷினி நாடார்
ரோஷினி நாடார் நிர்வாகத்தின் கீழ் ஹெச்சில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சந்தை மதிப்பீட்டு அளவில் விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்தது. ஹெச்சிஎல் லாபத்தில் மட்டும் அல்லாமல் டாப் 4 நிறுவனத்தில் அதிக ஊழியர்களை இந்த டிசம்பர் காலாண்டில் பணியில் அமர்த்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 9840 ஊழியர்களை அமர்த்திய நிலையில் டிசம்பர் காலாண்டில் 2,197 பேரை குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது.

விப்ரோ நிறுவனம்
விப்ரோ நிறுவனம் டிசம்பர் 2022 காலாண்டில் டிசிஎஸ் போல ஊழியர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் விப்ரோ-வின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,59,179 ஆக இருந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் 435 பேர் குறைந்து 258,744 ஆகக் குறைந்துள்ளது.செப்டம்பர் காலாண்டில் வெறும் 605 ஊழியர்களை மட்டுமே சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனம்
மொத்தமாக முதல் காலாண்டில் 21,171 ஊழியர்களையும், 2வது காலாண்டில் 10,032 ஊழியர்களையும் சேர்த்த நிலையில் டிசம்பர் காலாண்டில் வெறும் 1,627 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளனர். இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாமல் 84 சதவீதம் சரிந்துள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனம்
இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் நிறுவனம் 2வது காலாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை 8359 பேர் அதிகரித்த நிலையில், பெரும் தடுமாற்றம் கொண்ட டிசம்பர் காலாண்டில் 2,945 ஊழியர்களைப் புதிதாகச் சேர்ந்துள்ளது. இதன் மூலம் இன்போசிஸ்-ஐ காட்டிலும் அதிக ஊழியர்களைச் சேர்த்துள்ளது.