
டிசிஎஸ் பணியமர்த்தல்
தரவின் படி நிறுவனங்களின் காலாண்டு அறிவிப்புகளைப் பார்க்கும்போது நிறுவனங்கள் அனைத்துமே பணியமர்த்தலைக் குறைத்துள்ளன.
முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், மூன்றாவது காலாண்டில் 7000 பிரஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் 9840 பேரை பணியமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் & ஹெச்சிஎல் டெக்
இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 6000 பிரஷ்ஷர்களை பணியமர்த்தியது. இதே இரண்டாவது காலாண்டில் 10,032 பேரை பணியமர்த்தியது.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 5892 பேரை பணியமர்த்தியுள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் 2500 பேரை பணியமர்த்தியது.

பென்ச் அளவு
ஐடி நிறுவனத்தில் பென்ச் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாகவே வைத்துள்ளனர். இந்த விகிதத்தினை நிறுவனங்கள் தொடர்ந்து பரமரித்து வருகின்றன. முந்தைய சில காலாண்டுகளாகவே தேவையானது அதிகளவில் இருந்த நிலையில், ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பென்ச் ஊழியர்களை அதிகளவில் பராமரித்தன.

இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய், டிசம்பர் காலாண்டில் நிறுவனம் 81.7 ஊழியர்களின் மிகக் குறைந்த பயன்பாட்டு விகிதத்தினைக் கொண்டிருந்தது. கனிசமான ஊழியர்கள் பென்ச் ஊழியர்களாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தக்கவைப்பு விகிதம்
முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது நிறுவனங்களின் தக்கவைப்பு விகிதமும் மிகவும் உயர்ந்துள்ளது. இதே லேட்டரல் பணியமர்த்தலானது குறைந்துள்ளது.

அட்ரிஷன் விகிதம்
முன்னணி ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது கனிசமானது குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் 21.3% ஆகவும், செப்டம்பர் காலாண்டில் 21.5% ஆகவும் இருந்தது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 24.3% ஆகவும் குறைந்துள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் 27.1% ஆகவும் இருந்தது. இதே ஹெச் சி எல் டெக் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 21.7% ஆகவும், முந்தைய காலாண்டில் 23.8% ஆகவும் உள்ளது.

பணியமர்த்தல் குறைப்பு
முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது பணியமர்த்தலானது குறைந்துள்ளது. இது சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஐடி துறையில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கோண்டு பணியமர்த்தலை குறைக்க வழிவகுத்துள்ளது. பல நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இனியாவது அதிகரிக்குமா?
தொடர்ந்து குறைந்துள்ள பணியமர்த்தல் விகிதமானது இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தற்போதைக்கு தேவையானது சரிவில் காணப்பட்டாலும் தொடர்ந்து டிஜிட்டல் மாற்றம் மற்றும் கிளவுட் சேவையில் மாற்றம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நீண்டகால நோக்கில் தேவையானது அதிகரிக்கலாம். இது பணியமர்த்தலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.