
சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் ‘எல்ஐசி ஜீவன் ஆசாத்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எல்ஐசி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்ஐசி ‘ஜீவன் ஆசாத் திட்டம்’ பங்குச்சந்தையில் சேராத, தனி நபர், சேமிப்பு ஆயுள்காப்பீடு திட்டமாகும். இதன்மூலம் சேமிப்பும், பாதுகாப்பும் கிடைக்கும்.
பாலிசிகாலத்தின்போது ஆயுள்காப்பீட்டாளர் துரதிருஷ்டவசமாக இறந்தால் அவரது குடும்பத்துக்கு இத்திட்டம் மூலம் நிதி ஆதரவு கிடைக்கும். மேலும் இதிலிருந்து கடன் பெறவும் முடியும். பாலிசி முதிர்வுத் தேதியில் உறுதிசெய்யப்பட்ட உத்தரவாதமான பணம் பாலிசிதாரருக்கு கிடைக்கும்.