
தங்க கடன் அதிகரிப்பு
மோதிலால் அஸ்வால் நிறுவனம் தங்கம் விலை அதிகரித்து வரும் சூழலில், கடந்த மூன்று மாதங்களில் தங்க கடனை அதிகளவில் எடுக்க வழிவகுத்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது. நகைக்கடன் தேவையானது அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இந்திய பியூச்சர் கமாடிட்டி சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்து, 10 கிராமுக்கு 56,449 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்றைய உச்சமான 56,460 ரூபாய்க்கு அருகிலேயே காணப்படுகின்றது.

வெள்ளி விலை
தங்கத்தினை போல வெள்ளி விலையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்ட்ராடே உச்சமான 69,669 ரூபாயினை எட்டியுள்ளது. இதே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அவுன்சூக்கு 1916 டாலர்களை எட்டியுள்ளது.
இது தற்போது பணவீக்கம் என்பது மெதுவாக தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் தேவையானது குறையத் தொடங்கியுள்ளது. இது மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிப்பதை மெதுவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஹெட்ஜிங்
பணவீக்க அழுத்தத்தின் மத்தியில் டாலரின் மதிப்பானது இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை, சர்வதேச பொருளாதாரத்தின் மத்தியில் சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் அதிகரிப்பு
இவ்வாறு பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கத்திற்கு எதிரான கடன் விகிதமும் அதிகரித்துள்ளதாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

நகைக்கடன்
தென் இந்தியாவினை பொறுத்த வரையில் நகைக்கடன் வழங்குவதில் பிரபலமான நிதி நிறுவனம் முத்தூட் பைனான்ஸ் ஆகும். தங்கத்தின் விலை உயர்வானது தங்க கடன் தேவையை அதிகரிக்க வழிவகுத்தது மற்றும் தங்க ஏலத்தில் குறிப்பிடத்தக்க சரிவுக்கும் தேவை

இனியும் வளர்ச்சி அதிகரிக்கலாம்
முத்தூட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் என இரண்டு ஜனவரி 2023ல் தங்களுடைய நகைக்கடனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எதிர்பார்ப்பை தாண்டி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது. அடுத்த இரு காலாண்டுகளுக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடன் செலவுகளும் 2024ம் நிதியாண்டில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரை
ஒட்டுமொத்த தரகு நிறுவனங்களும் நடப்பு ஆண்டில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என கூறி வருகின்றன. சர்வதேச பொருளாதாரம் குறித்த குறிகாட்டிகள் என்பது விரிவடைந்து வருகின்றது. இதற்கிடையில் முத்தூர்ட் நிறுவனத்தின் இலக்கு விலை 1150 ரூபாயாகவும், இதே மணப்புரம் நிறுவனத்தின் இலக்கு விலை 150 ரூபாயாகவும் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.