
நிரூபிக்கணும்:
இதனால், இன்று முதல் துவங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இஷான் கிஷன் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதற்காக அவர் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கிஷன் இந்த நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் டிராவிட் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிஷன் பேட்டி:
இதற்கு பதிலளிக்கும் வகையில் இஷான் கிஷன் தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அதில், ”எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றால் அது மகேந்திரசிங் தோனிதான். அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவர் எங்கிருந்து வந்தாரோ, நானும் அதே இடத்தில் இருந்துதான் வந்திருக்கிறேன். எனவே, தோனி விட்டுச்சென்ற இடத்தை நான் நிரப்ப நினைக்கிறேன். எனது அணி வெல்ல கடுமையாக முயற்சி செய்வேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த நியூசிலாந்து டி20 தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக விலகிவிட்டார். இதனால், மாற்று ஓபனராக பிரித்வி ஷா மட்டும்தான் இருக்கிறார். இதனால், இத்தொடரில் இஷான் கிஷன் முதல் போட்டியில் சொதப்பினாலும், அடுத்த போட்டியில் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது. எனவே, அவர் அழுத்தங்கள் இல்லாமல் விளையாட முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.