
மன அழுத்தம் என்பது மனிதர்களாகிய அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். ஒரு மனிதன் மிகவும் பதற்றமாகவும், கவலையுடனும் உணர்ந்தால் அவருக்கு தியானம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு சிறிது நேரம் செய்யக்கூடிய தியானம் கூட மனதை கட்டுப்படுத்தவும், மனஅமைதியைப் பெறவும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். தியானத்தை மிகவும் எளிதான முறையில் நாம் செய்யலாம். அதற்காக பிரத்யேக பொருட்கள் எதுவும் தேவையில்லை. மன அழுத்தத்தாலோ, முன்கோபத்தாலோ நாம் துவண்டு போனால், நாம் நமக்கு உதவும் வகையில் தியானம் போன்ற வழிகளை நாடுகிறோம்.