
குற்றச்சாட்டு
அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், இரண்டு ஆண்டாக ஆய்வு செய்ததாகவும், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் தனது நிறுவன பங்குகளின் விலையை அதிகரிக்கச் செய்வதாகவும், அதானி குழுமம் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

போலியாக நிறுவனங்கள்
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழும நிறுவனங்களில் இருந்து பணம் கையாடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு கவலையளிக்கும் ஒரு விஷயம் என்னவெனில் அதானி குழுமம் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

முதலீட்டாளர்கள் குழப்பம்
ஹிண்டன்பர்க்கின் இந்த கருத்தானது, அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கீடானது வெளியாகவுள்ள நிலையில் வந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியம் பெரும் அதிர்ச்சியினையும், குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இது பொய்யான தகவல்கள்
இதற்கிடையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியான ஜுகேந்தர் சிங், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்ட ஆய்வறிக்கையை மறுத்துள்ளது. இது தவறான தகவல்கள். ஆதாரமற்ற தகவல்கள். இது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதன் எஃப் பி ஓ-வினை செய்ய உள்ள நிலையில் உள்ளது. இது உரிமை பங்கு வெளியீட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளார்.

மிக அதிர்ச்சி அளிக்கிறது
ஹிண்டர்ன்பர்க் எங்களை தொடர்பு கொள்ளவோ அல்லது உண்மையான தகவல்களை சரி பார்க்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக அந்த ஆராய்ச்சி நிறுவனம் தேடப்பட்ட தகவல்கள் தவறானவை. இதனை இந்திய உயர் நீதிமன்றங்கள் ஆய்வு செய்து நிராகரித்தவை என்றும் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டத்தினை மதிக்கும்
இது நிறுவனத்தின் மீதான நல்ல மதிப்பினை குறைக்கும் விதமாக வந்துள்ளது. அதானி குழும நிறுவனத்தின் உரிமை பங்கீட்டினை சேதப்படுத்தும் முயற்சி. முதலீட்டாளர்கள் அதானி குழுமம் மீது வலுவான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். இதனை சேதப்படுத்தும் விதமாக ஒரு தலைபட்சமாக இந்த ஆய்வறிக்கை வந்துள்ளது. ஆனால் ஆதாரமற்ற இந்த அறிக்கையால் பாதிப்பு இருக்காது. நிறுவனம் எப்போதும் சட்டங்களை மதிக்கிறது. கார்ப்பரேட் நிர்வாகத்தின் நடைமுறைகளை சரியாக பின்பற்றி வருகின்றது.

முதலீட்டாளர்கள் கவலை
ஹிண்டன்பர்க்கின் இந்த எச்சரிக்கை அதானியின் சகோதரர் ராஜேஷ் அதானி மற்றும் மைத்துனர் சமீர் வோரா, ஆகியோர் வைர வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள். இதனையும் வைத்து செயற்கையாக வரவு செலவு திட்டங்களை உருவாக்கியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இதன்மூலம் எந்தக் கவலையும் இந்த கருத்தானது, முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.