
ஐடிசி
இந்தியாவின் FMCG நிறுவனமாக விளங்கும் ஐடிசி, யோகா பார் பிராண்டின் உரிமையாளரான Sproutlife Foods ஸ்டார்ட்அப் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. D2C பிரிவில் இருக்கும் Sproutlife Foods நிறுவனம் பெரு நகரங்களில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது.

ஸ்ப்ரூட்லைஃப் ஃபுட்ஸ் நிறுவனம்
தற்போது ஐடிசி மற்றும் ஸ்ப்ரூட்லைஃப் ஃபுட்ஸ் நிறுவனம் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அடுத்த 3 – 4 வருடத்தில் மொத்த நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இதில் முதல் கட்டமாக மார்ச் 2025க்குள் பல கட்ட கைப்பற்றல் மூலம் 47.5 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டது.

175 கோடி ரூபாய் முதலீடு
இத்திட்டத்தின்படி வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் 175 கோடி ரூபாய் முதலீடு செய்து 39.4 சதவீத பங்குகளை வாங்கவும், மார்ச் 31, 2025க்குள் மற்ற பங்குகளை 80 கோடி ரூபாய் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது ஐடிசி.

பேலென்ஸ் ஷீட் கைப்பற்றல்
மேலும் அடுத்த 3 மாதத்திற்குள் Sproutlife Foods நிறுவனம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டின் கீழ் பேலென்ஸ் ஷீட்-ஐ கைப்பற்றியுள்ளது ஐடிசி. 2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டில் ஸ்ப்ரூட்லைஃப் ஃபுட்ஸ் நிறுவனம் சுமார் 68 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதலைப் பெற்றுள்ளது, இது 2019-20ல் 32 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யோகா பார்
யோகா பார் பிராண்டின் கீழ் ஊட்டச்சத்துப் பார்கள், மியூஸ்லி, ஓட்ஸ் மற்றும் தானியங்கள் உட்பட ஆரோக்கியம் சார்ந்த போர்ட்போலியோவைக் கொண்டுள்ளது. ஆப்லைன் ஸ்டோர்களில் இதன் வர்த்தகம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில், ஆன்லைன் விற்பனையில் சிறப்பாக இயங்கி வருகிறது.

ஆப்லைன் ஸ்டோர்
ஆப்லைன் ஸ்டோர்களில் இதன் ஆதிக்கம் அதிகரிப்பது தான் ஐடிசி போன்ற பெரிய பிராண்டுகளுக்குப் பிரச்சனை. இந்த நிலையில் தான் Sproutlife Foods நிறுவனத்தை ஐடிசி வாங்க முடிவு செய்தது.

ஐடிசி
இதன் மூலம் ITC தனது எதிர்கால-தயாரான போர்ட்போலியோவை விரிவாக்கம் செய்யவும், ‘குட் ஃபார் யூ’ இடத்தில் சந்தை இருப்பை அதிகரிக்கவும் Sproutlife Foods நிறுவனம் பெரிய அளவில் உதவுகிறது.

ஐடிசி நிறுவன போர்ட்போலியோ
ஐடிசி நிறுவனத்தின் ‘குட் ஃபார் யூ’ பிரிவில் தற்போது ஆசீர்வாத் மல்டி கிரேன் அட்டா, ஆஷிர்வாத் நேச்சர்-ஸ் சூப்பர் ஃபுட்ஸ், ஃபார்ம்லைட் பிஸ்கட், சன்ஃபீஸ்ட் புரோட்டீன் ஷேக், பி நேச்சுரல் நியூட்ரிலைட் ஏபிசி பானம் ஆகியவை அடங்கும்.