
2023-24 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான தயாரிப்புகளில் மத்திய நிதியமைச்சகம் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின்படி ரயில்வே துறைக்கு மட்டும் சுமார் 1.9 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த சிறப்பு நிதி மூலம் ரயில்வே துறையை வெளிநாட்டு ரயில் போக்குவரத்தைப் போல மிக நவீனமயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில்கள் தயாரிப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. அதன் முதல் படியாக இந்த பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும் நிதி மூலம் 35 ஹைட்ரஜன் ரயில்களை இந்த நிதியாண்டு அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்தோடு, அண்மைக்காலங்களில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வரும் அதி நவீன வந்தே பாரத் ரயில்களையும் மத்திய அரசு அதிகரிக்க உள்ளது. அதற்காக ஒதுக்கப்படும் நிதி மூலம் 400 முதல் 500 வரை புதிதாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் வாகன தயாரிப்புகளை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த ஒரு நாட்டின் பல பகுதிகளில் தயாரிக்கப்படும் வாகனங்களை மற்ற பகுதிகளுக்கு எளிதாக கொண்டு செல்லும் வகையில் 4ஆயிரம் புதிய பெட்டிகள் உருவாக்கப்பட உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 58 ஆயிரம் புதிய ரயில் பெட்டிகளும் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜீரோ கார்பன் எமிசன் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் ரயில்பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு மிகவும் முன்னுரிமை அளிக்கிறது. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ரயல்பாதைகளையும் முற்றிலும் மின்மயமாக்கும் முனைப்போடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 100 விஸ்டாம் கோச்சுகளை கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைந்த பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் தொடங்கி வரும் 2030 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையை முற்றிலும் நவீனமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கான முன்னோட்டமாகதான் இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு சுமார் 1.9 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: