
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்தது. இதனால் ‘ஜெயிலர்’ படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி விடவேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து வருகிறார் நெல்சன்.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியது. மேலும், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினி, ரம்யா கிருஷ்ணன் காம்போ இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
Thunivu: வசூல் குறித்து பொய்யான தகவல்: ‘துணிவு’ பட இயக்குனர் அதிரடி.!
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பல மொழிகளில் சேர்ந்த பிரபலங்கள் ‘ஜெயிலர்’ படத்தில் இணைவது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.
KH 234: ஆண்டவருடன் இணையும் சூப்பர் ஸ்டார்: மணிரத்னமின் வேறலெவல் திட்டம்..!
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமன்னா படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமன்னா ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.