
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியை நேரில் சந்தித்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில் ‘விருதை விட உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் பெரிது’ என நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது தெரிந்ததே. ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை பெற்றது இந்த படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி அவர்களுக்கு கோல்டன் குலோப் விருது கிடைத்தது சமீபத்தில் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘டெர்மினேட்டர்’ ‘டைட்டானிக்’ ‘அவதார்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கேம்ஸ் கேமரூன் சமீபத்தில் எஸ்எஸ் ராஜமெளலியை சந்தித்து பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவில் ‘டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை நீங்கள் அனைத்து படங்களும் பிடிக்கும் என ராஜமௌலி கூறுகிறார், ‘நீங்கள் உங்கள் படங்களின் கதாபாத்திரங்களை சரியாக வடிவமைத்து இருக்கிறீர்கள், அந்த கதாபாத்திரங்கள் உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது, குறிப்பாக நீர் நெருப்பு என நீங்கள் படத்தின் கேரக்டர்களை செட்டப் செய்துள்ளீர்கள் என்றும் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டினார்.
மேலும், ‘ஹீரோ என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் ரிவில் செய்கிறீர்கள் என்றும் உங்கள் படத்தின் மியூசிக் அனைத்துமே சூப்பராக இருந்தது என்றும் தெரிவித்தார். இதனை கேட்ட ராஜமெளலி, ‘விருதுகளை விட உங்களுடைய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பெரிது’ என கூறினார்.
மேலும் ‘இந்த படத்தை தான் இரண்டு முறை பார்த்ததாகவும், இந்த படத்தை எடுக்க உங்களுக்கு எவ்வளவு நாள் ஆனது என்று கேமரூன் கேட்க, அதற்கு ராஜமெளலி, ‘320 நாட்கள் ஆனது’ என கூற, உடனே ஜேம்ஸ், ‘உலகத்திலேயே நீங்கள் தான் டாப்’ என புகழாரம் சூட்டினார். மேலும், ‘இங்கே ஹாலிவுட் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள், நான் உங்களுக்கு உதவுகிறேன்’ என்றும் ஜேம்ஸ் கேமரூன் கூறியது அந்த வீடியோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“நீங்கள் எப்போதாவது இங்கே ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்பினால், பேசலாம்”- #ஜேம்ஸ்கேமரூன் செய்ய #எஸ்.எஸ்.ராஜமௌலி. 🙏🏻🙏🏻
இரண்டு பழம்பெரும் இயக்குனர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதன் நீண்ட பதிப்பு இதோ. #RRR திரைப்படம் pic.twitter.com/q0COMnyyg2
— RRR திரைப்படம் (@RRRMovie) ஜனவரி 21, 2023