
சென்னை: ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஐ) தேர்ச்சி பெற வேண்டும். இது, ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு,பிரதானத் தேர்வு என 2 பிரிவாக நடத்தப்படுகிறது.
அதன்படி, 2023-24 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஜனவரி, ஏப்ரலில் நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட முதல்நிலைத் தேர்வு ஜன.24 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. அவற்றை jeemain.nta.nic.in எந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்தடுத்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்கள் வரும் நாட்களில் வெளியாகும்.
மாணவர்களின் புகைப்படங்கள் தெளிவாக இல்லாதவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். கூடுதல் விவரங்கள் https://nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.