
அறம் எங்கே செல்லுபடியாகும் என யோசித்து.. என்று தொடங்கும் ட்விட்டை உலக நாயகன் கமல்ஹாசன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த ட்விட் தற்போது வைரலாக வருகிறது.
இன்று இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பிரபலங்கள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததின வாழ்த்துக்களை .
இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சுபாஷ் சந்திரன் பிறந்தநாள் குறித்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மரணம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126வது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த டுவிட்டையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் சம்பந்தப்படுத்தி நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126வது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.
– கமல்ஹாசன் (@ikamalhaasan) ஜனவரி 23, 2023