
வரதராஜப் பெருமாள் கோவில்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 42வது திவ்ய தேச தலமாக போற்றப்படுகிறது. இத்தலம் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அறியப்படுகிறது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலிலும் மும்மூர்த்திவாசம் என குறிப்பிடுகின்றனர்.
வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களிலும் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் விஷ்ணு காஞ்சி என்ற பெயராலும் இருந்தாலும்.
கோவில் தனிச்சிறப்புக்கள் :

* இந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம்
* கல்லால் ஆன சிற்பங்கள், சங்கிலி
* 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் குளத்தில் இருந்து வெளியே வரும் அத்திவரதர்
கோவில் பற்றிய விபரங்கள் :
மூலவர் : தேவராஜ பெருமாள்
உற்சவர் : பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார் : பெருந்தேவி தாயார்
தீர்த்தம் : வேகவதி நதி, அனந்தசரஸ், சேஷ தீர்த்தம், வராக தீர்த்தம், பத்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், குசேல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
கோலம் : நின்ற திருக்கோலம்
தல வரலாறு:

சரஸ்வதி தேவி அளித்த சாபத்தால் இப்பகுதியில் யானையாக அலைந்து திரிந்தார் தேவர்களின் தலைவனான இந்திரன். யானைக்கு, ஹஸ்தகிரியின் மீது காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார் பெருமாள். சாப விமோசனம் பெற்ற இந்திரன் இத்தலத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு பலிகளை பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.
மற்றொரு சமயம் பிரம்ம தேவர், இத்தலத்தில் யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது வேகவதி நதி என்ற பெயரில் நதியாக பாய்ந்து ஓடிய சரஸ்வதி தேவியால் யாகம் தடைபடும் நிலை ஏற்பட்டது. அப்போது பிரம்மன், இத்தல பெருமாளை வேண்டினார். உடனடியாக பெருமாளே, நதியின் குறுக்கே சயன கோலத்தில் கிடந்து வேகவதி நதியை தடுத்து நிறுத்தி, பிரம்மாவின் யாகத்தை காப்பாற்றினார். ஆயிரம் சூரியன்கள் இணைந்த பிரகாசத்துடன் பிரம்ம தேவருக்கு காட்சி கொடுத்ததால் இத்தல பெருமாளுக்கு வரதராஜ சுவாமி என்ற பெயர் உண்டாயிற்று.
தை அமாவாசை விரதம், தர்ப்பணம் பற்றிய உங்கள் கேள்விகளும் எங்களின் பதில்களும்
அத்திவரதர் தோன்றிய கதை :

இந்த பெருமாளே அத்தி மரத்தில் ஐக்கியமாகி இத்தல குளத்தில் நிரந்தரமாக வாசம் செய்வதாகவும், பிரம்மா செய்த யாகத்தில் இருந்து அத்திவரதர் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. அத்தி மரத்துடன் கூடிய தலம் என்பதால் இத்தலம் அத்திகிரி என்றும். பிரம்ம தேவர், சரஸ்வதியை பிரிந்து சென்று, விஷ்ணுவின் அருளை பெற வேண்டி அஸ்வமேத யாகம் நடத்தினார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த பெருமாள், பூமிக்கு அடியில் இருந்து தோன்றி பிரம்மாவுக்கு காட்சி கொடுத்ததுடன், சரஸ்வதியையும் சேர்த்து வைத்தார். சாபத்தால் பல்லியாக மாறிய கெளதம முனிவர், இத்தல பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
கோவில் உருவான வரலாறு :

இக்கோவிலில் உள்ள 350 கல்வெட்டுகளின் படி, சோழர்கள், பாண்டியர்கள், பல்லவ, சேரர், விஜயநகர பேரரசர்கள், கந்தவாரியர்கள் என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் இக்கோவில் உருவாக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1053 ஆம் ஆண்டு சோழர்களால் இக்கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 14 நிமிடங்களில் வந்த சோழ மன்னர்களால் இக்கோவில் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட விலைமதிப்புமிக்க ஆரம், ஆண்டுதோறும் கருட சேவையின் போது மட்டும் சுவாமிக்கு அணிவிக்கப்படும்.
கோவில் அமைப்பு:

சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிற்ப வேலைப்பாடுகள், அழகிய தூண்கள் ஆகியன இக்கோவின் தனிச்சிறப்பாகும். ஆழ்வார் பிரகாரம், மடப்பள்ளி பிரகாரம், திருமலை பிரகாரம் என இக்கோவில் 3 நிலை பிரகாரங்களைக் கொண்டது. இக்கோவிலில் 32 சன்னதிகள், 19 விமானங்கள், 389 தூண்களைக் கொண்ட மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் பிரதான குளத்திற்கு அனந்த தீர்த்தம் என பெர். இக்கோவிலில் உள்ள 96 தூண்களில் ராமாயணம் மற்றும் மகாபாரத சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ரதி, மன்மதன், லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி வராகர், லட்சுமி ஹயக்ரீவர் போன்ற சிற்பங்கள் மிக குறிப்பிடப்பட வேண்டியவை.
சூரிய ஒளி மூலவர் மேல் நாள்

இக்கோவின் பிரதான ராஜ கோபுரம் மேற்கு நோக்கியபடி 130 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 7 நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவிலில் சித்ரா பெளர்ணமிக்குப் பிறகு வரும் 15 வது நாளில் சூரி ஒளி மூலவர் மீது படும். கோவிலின் கிழக்கு கோபுரம் பிரதான கோபுரத்தை விட பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப் பெரிய தொங்கும் கற்சங்கிலி இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு. இது விஜயநகர கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. மூலஸ்தானத்திற்கு மேல் அமைந்துள்ள விமானத்திற்கு புண்ணியகோடி விமானம் என பெயர். பெருந்தேவி தாயார் சன்னதி கல்யாண கோடி விமானத்தின் கீழ் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் தேவராஜ பெருமாள் 10 அடியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
Palani Kumbabishekam: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் – ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு
அத்தி வரதர் :

மூலவர் உருவர் கல்லால் ஆனது. இவர் தவிர அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ பெருமாள் சிலையும் இக்கோவிலில் உள்ளது. இந்த சிலை அனந்தசரஸ் குளத்திற்குள் உள்ள அறையில் பாதுகாக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, வெளியில் எடுக்கப்படுகிறது. முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் என 48 நாட்கள் மட்டுமே கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். அதற்கு பிறகு மீண்டும் அத்திவரதர் குளத்திற்குள்ளாகவே வைக்கப்படுவார். 16 ஆம் ஆண்டு அந்நியர்கள் படையெடுப்பில் இருந்து மூலவர் சிலையை காப்பாற்றுவதற்காக மரத்தால் ஆன சிலை வைக்கப்பட்டிருக்கலாம். தற்போதுள்ள சிலை நிறுவப்பட்ட பிறகு மரத்தால் ஆன சிலை என்ன ஆனதென்று தெரியவில்லை. 1709 மீ ஆண்டு குளத்தில் உள்ள நீர்வற்றிய போது, குளத்தை தூர்வாரும் பணிகளின் போது அத்திவரதர் சிலை எடுத்து வழிபடப்பட்டது. அதற்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியில் எடுக்கும் வழக்கம் கொண்டு வரப்பட்டது.
மூன்று பிரகாரங்கள்

மூலஸ்தானத்திற்கு அருகில் நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. மிக அரிதாக 12 திருக்கரங்களுடன் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். அவருக்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தில் சக்கரத்தாழ்வாரின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவில் சிறப்புகள் :
12 ஆழ்வார்களும் தரிசித்த தலம், திருமங்கை ஆழ்வார் 4 பாசுரங்களிலும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களிலும், பேயாழ்வார் ஒரு பாசுரத்திலும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்கிறார். வேதாத்ரி சுவாமிகள் 200க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளில் வரதராஜப் பெருமாளைப் பாடி உள்ளார்.
விழாக்கள்:

வைகாசி மாத பிரம்மோற்சவம், கருட சேவை, தேர் திருவிழா ஆகியன நடத்தப்படுகிறது. இது தவிர அத்திவரதர் விழா 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை அத்திவரதர் விழா நடத்தப்பட்டது. அடுத்ததாக 2059 ஆம் ஆண்டு அத்திவரதர் விழா நடைபெற உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்,
காஞ்சிபுரம் – 631501
காஞ்சிபுரம் மாவட்டம்
தொலைப்பேசி : + 91 – 44 – 2726 9773, 94439 90773