
விருதுநகர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடட்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
இது குறித்து அவர் விருதுநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வரப்போகும் மத்திய பட்ஜெட்டிலாவது, விருதுநகர் மாவட்டத் துக்கு முன்னேறத் துடிக்கும் மாவட்டத்துக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு 9 வாரங்களாக ஊதியம் வழங்கப் படவில்லை.
மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஊதியம் வழங்க வேண்டும். இப்பிரச்சி னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். மத்திய நிதி அமைச் சரையும் சந்தித்துப் பேசுவேன். ஈரோடு கிழக்குத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணா மலைக்கு தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடட்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் தொகுதி மறு சீரமைப்பு பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
ராகுல் காந்தியின் யாத்திரை 30-ம் தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் அனைத்து பகுதியிலும் காங்கிரஸ் கொடி யேற்றி காந்தி உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.