
காலை என்பதே எப்போதும் பரபரப்பான நொடிகள்தான். அந்த நொடிகளை கொஞ்சமும் வீண் செய்யாமல் சரியாக செய்தால்தான் அந்த காலை பரபரப்பை டென்ஷன் இன்றி கடந்து செல்ல முடியும். இல்லையெனில் நாள் முழுவதும் அந்த டென்ஷன் ஒட்டிக்கொண்டு எதுவும் சரியாக நடக்காதது போன்ற உணர்வு தோன்றும். அந்த வகையில் உங்கள் காலை வேலையை சுலபமாக்க இந்த பிரேக்ஃபாஸ்டை செய்யுங்கள். இதனால் வயிறும் நிறைவடையும்… நேரமும் மிச்சமாகும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1
எண்ணெய் – 5 தேக்கரண்டி
முட்டை -1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தே.அ
கோதுமை மாவு – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சீவிக்கொள்ளுங்கள். அதை நன்றாக சுத்தம் செய்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி உருளைக்கிழங்கு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
பின் கோதுமை மாவு, முட்டை அதோடு தூள் வகைகளையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் இந்த உருளைக்கிழங்கு கலவையை கலந்து தோசை போல் ஊற்றவும்.
எண்ணெய் சுற்றிலும் ஊற்றி திருப்பிப் போட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் உங்கள் காலையை முழுமையாக்கும் உணவு தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: