
மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்து மதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான மகா சிவராத்திரி எப்போது வருகிறது? எப்படி பூஜை செய்து கொண்டாட வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்…
மகா சிவராத்திரி இந்து மதத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டு, விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்து நாட்காட்டியின்படி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி (மாசி 6ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு.
அதிலும் இந்த வருடம் 2023ஆம் ஆண்டு பிரதோஷ விரதமும், மகா சிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருகிறது. பிரதோஷ விரதம் இம்முறை சனிக்கிழமையில் வருவதால், இது சனி பிரதோஷம் என்றும் அறியப்படுகிறது. இந்த நாளில், விரதம் இருப்பவர்களுக்கு, சிவபெருமான் ஆண் குழந்தை பாக்கியத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது.
அம்மனுக்கு நவராத்திரி, சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
1. நித்திய சிவராத்திரி
2. மாத சிவராத்திரி
3. பட்ச சிவராத்திரி
4. யோக சிவராத்திரி
5. மஹா சிவராத்திரி
இதில் மஹா சிவராத்திரி சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று வருகிறது. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பது கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வது மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.
மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமர்சனமாக நடந்தேறும்.
மகா சிவராத்திரி எப்போது?
இந்த ஆண்டு, மகா சிவராத்திரிக்கான உகந்த நாள் பிப்ரவரி 18ஆம் தேதியாகும். அன்று சனிக்கிழமை இரவு 08.02 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் பிப்ரவரி 19, ஞாயிறு, மாலை 04:18 மணிக்கு முடிவடையும்.
விரதம் இருக்கும் நேரமும் முடிக்க வேண்டிய நேரமும்
பிப்ரவரி 18 ஆம் தேதி மகா சிவராத்திரி விரதத்தைத் தொடங்குபவர்கள் மறுநாள் பிப்ரவரி 19 ஆம் தேதி அதை முடிப்பார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மகா சிவராத்திரி பாரணம் காலை 06.59 மணிக்கு தொடங்கி மதியம் 03.24 மணிக்கு எந்த நேரத்திலும் முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: