
திரெளபதியின் ஆணவம்
பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரெளபதிக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மீது தன்னை விட சிறந்த பக்தி கொண்டவர் இந்த உலகில் யாரும் இல்லை என்ற எண்ணம் வந்தது. பக்தியாக இருந்தாலும் இந்த ஆணவம் பாரத போரில் அவர்களின் வெற்றிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும் என எண்ணினார் கிருஷ்ணர். இதனால் திரெளபதியின் ஆவணத்தை ஒழிக்க முடிவு செய்தார்.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, அவர்கள் காட்டில் தங்கி குடிலுக்கு சென்றார் கிருஷ்ணர். அவரை கண்டதும் மகிழ்ச்சியில் பூரித்து போன திரெளபதி, தனது அண்ணனான கண்ணனின் காலில் விழுந்து வணங்கினாள். “ரதம் ஏதுவும் காணவில்லையே நீங்கள் இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள்” என ஆச்சரியமாக கண்ணனிடம் கேட்டாள் திரெளபதி.
பகைகள் தீர்க்கும் பஞ்சமி வழிபாடு : யாரை வழிபட கேட்ட வரம் கிடைக்கும்?
நடந்தே வந்த கண்ணன் :

அதற்கு பதிலளித்த கண்ணன், “தங்கை காட்டிற்கு போனாலே எப்படி இருக்கிறாள் என ஒரு முறை வந்து பார்த்தாயா? என கோபம் கொள்வாயே. அதனால் உன்னை காண வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் என்னை உந்தி தள்ளியது. அதனால் தூரங்கள் எனக்கு தெரியவில்லை. நடந்தே இங்கு வந்துவிட்டேன்” என்றார். கண்ணனின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த திரெளபதி, “எனக்காக என்னை காண நடந்தே இங்கு வந்தாயா? கால்கள் வலிக்குமே” என அக்கறையுடன் விசாரித்தாள்.
தைப்பூசம் 2023 எப்போது ? தைப்பூச சிறப்புகளும் விரதம் இருக்கும் முறைகளும்
வெந்நீர் வைத்த திரெளபதி :

பிறகு வெந்நீர் வைத்து தருகிறேன். நீராடினால் உடல் களைப்பு, பாதங்களின் வலி போய் விடும் என சொல்லி வெளியே சென்றாள். பீமனிடம் கூறி மிக பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வரச் செய்தாள். பெரிய பாறைகளை உருட்டி வந்து இருவரும் அடுப்பு மூட்டினார்கள். பெரிய மரத்தை வேருடன் பெயர்த்து எடுத்து வந்து தீமூட்டினர். வெகு நேரம் ஆனது. ஆனாலும் தண்ணீர் கொஞ்சமும் சூடு ஏறவில்லை. மேலும் தீயை எரித்துக் கொண்டே இருந்தனர். ஆனாலும் பயனில்லை.
பழனி முருகன் கோவிலில் திடீரென குவியும் பக்தர்கள் கூட்டம் : காரணம் என்ன?
தவளையை காப்பாற்றிய கண்ணன் :

தண்ணீர் சுடாமல் இருந்ததை விட மேலும் குளிர துவங்கியது. இதனால் திரெளபதியும், பீமனும் குழப்பம் அடைந்தனர். இதென்ன அதிசயம், கொழுந்து விட்டு எரியும் அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் நிரப்பப்பட்ட நீர் சுடவில்லை என்பதை விட, குளிர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகிறதே என திகைத்து நின்றனர்.
அந்த சமயத்தில் இங்கு வந்த கண்ணன், என்ன தங்கையே வெந்நீர் வைக்கிறேன் என்றாயே. வெந்நீர் தயாராகி விட்டதா என்று கேட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற திரெளபதியும், பீமனும், தயக்கத்துடன் கண்ணனிடம் நடந்தவற்றைக் கூறினர். அதைக் கேட்டு புன்னகையுடன் நின்ற கண்ணன், “பீமா! எந்த பாத்திரத்தில் உள்ள நீரை கீழே கொட்டு” என்றார். பீமன் அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்தை சாய்த்ததும் அதிலிருந்து ஒரு தவளை தாவிக் குதித்து ஓடியது.
இதுவும் பக்தி தான்:

அப்போது கண்ணன், “திரெளபதி! நீ எனக்காக தண்ணீரை சூடேற்ற நினைத்தாய். ஆனால் அந்த பாத்திரத்திற்குள் இருந்த தவளையோ, தான் இறந்து விடக் கூடாது என என்னை வேண்டிக் கொண்டே இருந்தது. காரணம்” என்றார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட திரெளபதி, “ஒரு தவளையின் பக்திக்கு இத்தனை வலிமையா? அப்படியானால் எனது பக்தி தான் சிறந்தது என நான் நினைத்தது தவறா?” என மனதிற்குள் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
பக்தியிலும் ஆணவம் கூடாது :
அதை புரிந்து கொண்டு விளக்கம் தந்த கண்ணன், பக்தி செய்பவர் யார் என்பவர் விஷயமல்ல. பக்தி அனைவருக்கும் சமமானது. பக்தி என்பதிலும் ஆவணம் கூடாது. தன்னால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் அவனே என பூரண சரணாகதி, பூரண நம்பிக்கை ஆகியன தான் பக்தி என்றார். தனது தவறை உணர்ந்து ஆவணத்தை விடுத்த திரெளபதி, பக்தி என்றால் முழுவதுமாக புரிந்து கொண்டாள்.