
மகிந்திரா மற்றும் மகிந்திரா நிறுவனம், புதிய தார் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய தார் ஆல் வீல் டிரைவ் கொண்டது. புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது 2 வீல் டிரைவ் கொண்டது. இதன் ஷோரூம் விலையாக துவக்கஎக்ஸ் (ஓ) ரியர்வீல் டிரைவ் டீசல் சுமார் ரூ.9.99 லட்சம் எனவும், எல்எக்ஸ் ரயர் வீல் டிரைவ் டீசல் ரூ.10.99 லட்சம் எனவும், டாப் வேரியண்டா எல்எக்ஸ் ரயர் வீல் டிரைவ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் விலை சுமார் ரூ.13.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை முதல் 10,000 கார்களுக்கு மட்டுமே. டீசல் வேரியண்ட் டி117 சிஆர்டிஇ இன்ஜின் கொண்டது. இது அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் வேரியண்ட் 150 டிஜிடிஐ இன்ஜின் கொண்டது. இது அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.