
சமூக ஊடகங்களான ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றின் பயன்பாடு சமீப காலங்களாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. அவற்றில் தங்களது படைப்புகள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு தளங்களில் விரிவடைந்து வரும் இந்த சமூக ஊடக பயன்பாட்டு சந்தையானது மிகப் பெரிய அளவிலான வர்த்தகமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் நுகர்வோரின் நலனை பாதுகாக்கவும், தவறான வழிகாட்டும் வகையிலான விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், மத்திய அரசு புது விதிகளை வகுத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, சமூக ஊடகங்களில் உள்ள பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் திகழ்பவர்களுக்காக, மத்திய நுகர்வோர் துறையின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு முறைகள் என்னென்ன? : சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள், ஏதேனும் சேவைகள் அல்லது திட்டங்கள், பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடும்போது, சலுகைகள் உள்ளிட்டவை வெளியிடப்பட வேண்டும். அதாவது, விளம்பரங்களில் ஸ்பான்சர் செய்யப்பட்ட அல்லது விளம்பரம் அல்லது கட்டண விளம்பரங்கள் என்ற வாசகங்களுடன் விளம்பரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுகள், ஓட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட நுகர்வோர் நலன் சார்ந்த அனைத்து விவரங்களையும் அவர்கள் வெளியிடுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் எளிதில் புரியக்கூடிய மற்றும் தெளிவான மொழியில் இடம்பெற வேண்டும். லைவ் நிகழ்ச்சியாக இருந்தால் போதும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த விளம்பரங்கள், செய்திகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இவ்வளவு ரேட் கம்மியா? ஸ்மார்ட் வாட்ச் விலையை அதிரடியாக குறைத்த ஒன்பிளஸ்!
விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் என்ன தண்டனை?
சமூக ஊடகத் தளங்களில் உள்ள பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் திகழ்பவர்களுக்காக, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை வகுத்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் தண்டனை கிடைக்கும். இதனால், தயாரிப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அவற்றை வழங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழுமானால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என மத்திய அரசின் நுகர்வோர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளம்பரங்கள் என்ற நிலையையும் தாண்டி பல்வேறு ஆதாயங்களுக்காக சமூக ஊடக விளம்பரங்கள் அதிக அளவில் வெளியிடப்படுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: