
திருச்சி: திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் மற்றும் திருவானைக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள காவிரி ஆற்றுப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகள் இன்று நேரில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்துக்கு பயன்படும் வகையில், பணிகளை விரைவாகவும், தரமானதாகவும், முடித்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.