
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.