
சென்னை: முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. sdat.tn.gov.in இணையதளம் மூலம் லட்சக்கணக்கானோர், ஆன்லைனில் பதிவு செய்க. முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி ஆகும். சிலம்பம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெற உள்ளன.