
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் திரை உலகின் பிரபலங்கள் குவிந்தனர்.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி என்பவருக்கும் ராதிகா மெர்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்த விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபோல் பாலிவுட் திரை உலக பிரபலங்களான அக்ஷய்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர் சல்மான் கான், நடிகை ஜான்வி கபூர் மற்றும் அவரது சகோதரி குஷி கபூர், நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரிகான் மற்றும் அவரது மகன் ஆரியன் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நடிகர் சைப் அலிகான் மகள் நடிகை சாரா அலிகான், நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகர் வருண் தவான், நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா, பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் அவரது மகன் அர்ஜுன் கபூர், நடிகை ரன்வீர்சிங் மட்டும் அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோனே, நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.