
நள்ளிரவில் பணி நீக்கம்
இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 16 வருடங்களாக பணி புரிந்தவர்கள் கூட நள்ளிரவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரசவ விடுமுறைக்கு இன்று ஒரு வாரமே உள்ள ஒரு பெண், கூகுள் தன்னை பணி நீக்கம் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண் பணி நீக்கம்
பிரசவ கால விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு, நிறுவனம் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரசவத்தினை எதிர் நோக்கியுள்ள தனக்கு எப்படி, புதிய வேலை உடனடியாக கிடைக்கும் என கவலையில் உள்ள அந்த பெண், தனது வேதனையை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதயமே கனத்து விட்டது
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கேதரின் வாங் தான் அந்த பெண். அவர் புரோகிராம் மேலாளராக பணி புரிந்து வந்தார். 8 மாத கர்ப்பிணியான உள்ளவராவர். தனது வருகைக்காக சந்தோஷமாக இருந்த நிலையில், நிறுவனத்தின் பணி நீக்கப்பட்ட மெயிலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்ததாகவும், எனது இதயம் கனத்துவிட்டது என்றும் தனது குழந்தையின் இணைப்பு பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜீரணிக்கவே முடியவில்லை
மேலும் எனது செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், எனக்கு இப்படி ஒரு செய்தி கிடைத்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு புரோகிராம் மேலாளராக திட்டமிடலே என் உள்ளுணர்வாக இருந்தது. ஆனால் நான் கையாண்டதிலேயே இது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. அதிலும் பணி நீக்கம் செய்யப்பட்ட காலம் மிக கடினமானதொரு காலம்.

கைகள் நடுங்குகின்றன
34 வார கர்ப்பினியாக உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வேலை கிடைக்குமா? அது உடனடியாக என்பது நடக்காத ஒரு காரியம். நான் மகப்பேறு கால விடுமுறையில் செல்லவுள்ள நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
நாள் முழுக்க எனக்கு கால்களும், செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. மக்கள் எனது குழந்தையின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். நான் குழந்தையின் நலன் கருதி எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால் இன்னும் கூட என் கைகள் நடுங்குகின்றன.

உணர்வுபூர்வமான பதிவு
என் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இவ்வுலகினை எட்டி பார்க்க வேண்டும். ஆக நான் உறுதியாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் அதனை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. கூகுளில் நான் இருந்த காலத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கும், வளர்ச்சிக்கும் நன்றி. நான் உண்மையில் இதுவும் கடந்துபோகும் என உணர்வுபூர்வமான ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.