
1/19/2023 3:45:18 PM
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு பல நடிகைகள் போட்டி போடும் நிலையில், அதை சில வருடங்கள் வரை தக்கவைத்துக் கொண்டிருந்த நயன்தாரா, தற்போது சினிமாவில் தனது மார்க்கெட் இறங்குமுகமாகி விட்டதை நன்கு உணர்ந்துள்ளார். அதனால், இனி ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரித்துள்ள படம், ‘இறைவன்’. இதில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம்பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி ஆகியோர் நடித்துள்ளனர். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’, ‘ஜன கண மன’ ஆகிய படங்களை தொடர்ந்து ஐ.அஹமத் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையுடன் படம் உருவாகியுள்ளது.