
நொய்டா: உத்தரப் மாநில பிரதேசத்தின் நொய்டா நகரில் அமைந்துள்ள ‘கே3’ எனும் கியோஸ்கிற்கு மாத வாடகை ரூ. 3.5 லட்சம் செலுத்த தயார் என சொல்லி ஏலம் எடுத்துள்ளார் பிஹார் மாநிலத்தை சேர்ந்த தேநீர் வியாபரியான சோனு குமார் ஜா. இந்த தொகை ஏலத்தின் அடிப்படை விலையை காட்டிலும் பல நூறு சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவின் செக்டார் 18-ல் உள்ள டிரையாங்கிள் பூங்காவில் அமைந்துள்ளது இந்த கே3 கியோஸ்க். இதன் அளவு 7×7 என தெரிகிறது. நகர அமைப்பு நிர்வாகம் செக்டார் 18-ல் உள்ள 6 கியோஸ்குகளை வணிக ரீதியாக வியாபாரம் மேற்கொண்டது கடந்த ஜனவரி 10 அன்று ஏலத்தில் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த கே3 கியோஸ்க்.
மொத்தம் 20 பேர் கே3 கியோஸ்கை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டுள்ளனர். அதில் மாதம் ரூ.3.25 லட்சம் வாடகையாக செலுத்தும் வகையில் ஏலத்தில் எடுத்துள்ளார் சோனு. மொத்தம் 14 மாத வாடகையான சுமார் 45 லட்ச ரூபாயை அவர் முன்கூட்டியே செலுத்தினால் கியோஸ்க் வசம் ஒப்படைக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை அவரது தந்தை திகம்பர் உறுதி செய்துள்ளார். தனது மகன் வாடகை பணம் போக நிச்சயம் லாபம் ஈட்டுவார் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கு தேநீர், சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் யோசனையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு வியாபாரம் மட்டுமே தெரிந்ததாகவும். இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தது தன்னால் நம்ப முடியவில்லை எனவும் சோனு தெரிவித்துள்ளார். ஏலத்தில் வென்றது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோனு ஏலத்தில் எடுத்துள்ள கியோஸ்கின் அடிப்படை மாத வாடகை வெறும் 27 ஆயிரம் ரூபாய் தானாம்.