
உங்கள் பெயரில் உள்ள எழுத்தின் அடிப்படையில் எண் கணித பலன்கள்:
எழுத்து E:
இந்த எழுத்தை தன்னுடைய பெயரில் உள்ளவர்கள் மிகவும் வெளிப்படையாக பேசுபவராகவும், அடிக்கடி வெளியே செல்ல விரும்புபவராகவும் இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் தங்கள் மனதில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். இவருடைய சிந்தனையில் அனைத்துமே மிகவும் புதிதாகவும் யாரும் யோசிக்காத வகையிலும் இருக்கும். திறமையின் மூலம் அனைவரும் வியக்கும்படியான பல புதிய செயல்களை செய்வார்கள். உடலளவில் மிகவும் வலுவாக இருப்பார்கள்.
எப்போதும் அனைவரையும் விட ஒரு படி முன்னே சென்று யோசிக்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள். அதிக அளவு அறிவாற்றல் உடையவர்கள். ஒரு செயலை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள். எப்பாடுபட்டாவது தன்னுடைய அனைத்து திறமைகளையும் முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த செயலை செய்து முடிக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். இதனால் தான் அனைவரையும் விட இவர்கள் எப்போதுமே முன்னிலையில் இருப்பார்கள். இந்த எழுத்தை உடையவர்கள் எதிலும் வெற்றி பெறுவார்கள். முக்கியமாக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் அதிர்ஷ்டகரமான நபராக இருப்பார்கள்.
பரிகாரம்: வெறும் கோலோடு பொருட்களின் மீது காலை வேலைகளில் நடக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் அக்குவா
எழுத்து F:
எழுத்து F-ஐ தன்னுடைய பெயரில் உடையவர்கள் தங்களுடைய குடும்பத்தாரோடு கட்டுண்டு கிடப்பார்கள். மிகவும் அற்புதமான காதலர்களாக இருப்பார்கள். தங்களுடைய துணை எங்கேனும் வெளியே சென்றால் கூட இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. கிட்டத்தட்ட குழந்தையின் மனநிலையில் இவர்கள் வாழ்வார்கள். மிகவும் உண்மையாக இருப்பார்கள். மற்றவருக்கு மரியாதை கொடுப்பவராகவும் சுயத்துடனும் தங்களை நம்பியவரை ஏமாற்றாத குண நலன்களையும் பெற்றிருப்பார்கள். மற்றவர்களுக்கு பொருட்களை தானம் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். மிகவும் வெகுளித்தனமாக இருப்பார்கள். இதன் காரணமாக மற்றவர்களின் அவர்களை உபயோகப்படுத்திக் ஏமாற்ற வாய்ப்புகள் அதிகம். எனவே ஒருவரைமுழுமையாக நம்புவதற்கு முன் அதிகம் யோசிக்க வேண்டியது அவசியம்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். காதல் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் சிறந்த துணையாக இருப்பார்கள். இந்த எழுத்து நம்பிக்கையோடு இருப்பதையும் விசுவாசத்தோடு இருப்பதையும் குறிக்கிறது. இந்த எழுத்து தனது பெயரில் உள்ளவர்கள் தேச பக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதே சமயத்தில் ஒற்றுமையை விரும்புபவர் ஆகவும் நம்பகத்தன்மை மிகுந்தவராகவும் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புபவராகவும் இருப்பார்கள்.
பரிகாரம்: வீட்டில் வேலை செய்பவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ மற்றும் பிங்க்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: