
உங்கள் பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில் எண் கணித பலன்கள்:
எழுத்து ஜி:
இந்த எழுத்தை தன்னுடைய பெயரில் உள்ளவர்கள் நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உதாரணமாக திகழ்வார்கள். ஒரு விஷயத்தை மிக விரைவாக கற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். தங்களுக்கென சுய கட்டுப்பாடுகளுடன், கொள்கைகளை வகுத்துக் கொண்டு வாழ்வார்கள். தங்களது வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமாக குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக திட்டங்களை தீட்டி வாழ்வதில் இவர்கள் வல்லவர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத பல சாதனைகளை செய்வார்கள். இவர்களது பேச்சில் எப்போதும் கண்ணியம் மிகுந்திருக்கும்.
தங்கள் உள்ளுணர்வை கேட்டு செயல்படும் பட்சத்தில் பல வெற்றிகளை ஈட்டுவார்கள். இந்த எழுத்தை தன்னுடைய பெயரில் கொண்டவர்கள் மிகவும் மரியாதையாகவும், பணிவுடனும், தலைகனம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆனந்தம் அடைவார்கள். மேலும் இந்த எழுத்தானது மிகச் சிறப்பான முடிவுகள் எடுக்கத் தன்மையை உடையது. எனவே இந்த எழுத்தை தன்னுடைய பெயரில் உள்ளவர்கள் முக்கியமான நேரங்களில் மிக சரியான முடிவுகளை எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு உதாரணமாக இருப்பார்கள். எப்போதும் மற்றவரின் உதவியை எதிர்பாராமல் சுயமாக செயல்படுவார்கள்
பரிகாரம்: செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட ஏதேனும் பொருட்களை எப்போதும் உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள்
எழுத்து H:
இந்த எழுத்தை தன்னுடைய பெயரில் உள்ளவர்கள் எப்போதும் ஒரு அதிகார மையமாக திகழ்வார்கள். தலைமை பண்பு மிகுந்து உள்ளவர்களாக இருப்பார்கள். மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். தங்களுக்கென ஒரு லட்சியத்தை வகுத்துக் கொண்டு அதை நிறைவேற்ற செயல்படுவார்கள். இவர்களை சுற்றி உள்ளவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இவர்கள் வாழ்வார்கள். மேலும் தங்களை விட தகுதியில் குறைவாக இருக்கும் நபர்களை பார்த்து இவர்களுக்கு சிறிது ஏளனம் இருக்கலாம்.
இந்த குணத்தை அவர்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் எப்படியாவது இவர்களை ஆட்டி வைக்க முற்பட்டாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார்கள். மேடையில் பேசுவது, அரசியல், ஊடகம், உற்பத்தி துறை, கலை போன்ற துறைகளில் இவர்கள் மிகவும் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் திருமண வாழ்க்கை சற்று சுமராக இருந்தாலும் தொழிலை பொறுத்த வரையில் மிகவும் வெற்றிகரமான நபராக இருப்பார்கள்.
பரிகாரம்: பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். மது அருந்துவது புகைப்பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தை பின்பற்ற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.