
டெல்லி: தொலைதூர வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் டெல்லியில் இன்று நடைபெறவில்லை. ஒரே நாட்டில் ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்தில் திமுக எம்.பி. வில்சன் கடிதம் வழங்கியுள்ளார்.