
அமாவாசை தினம் என்றாலே வழிபாடு நடத்துவதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவதற்கு ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை காலங்கள் சிறப்பாகப் பார்க்கப்படுகின்றன. உயிர் நீத்தவர்களை திதி காலங்களில் அவர்களை நினைத்து வழிபாடு நடத்த முடியாதவர்கள் கூட இந்த தை அமாவாசை காலத்தில் வழிபாடு நடத்தலாம்.
முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவது அனைத்து பகுதிகளிலும் ஒன்றாக இருந்தாலும் நீர் நிலைகளில் வழிபாடு நடத்துவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தாமிரபரணி பாய் துவங்கும் பாபநாசம் முதல் மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயில் பகுதி வரை பல்வேறு இடங்களில் தூத்துக்குடி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் நீத்த முன்னோடிகளை நினைத்து நீர் நிலைகளில் நீராடி, தண்ணீர் இறைத்து, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்துகின்றனர்.
இன்று நடத்தும் வழிபாடு தங்கள் குடும்பத்தை சேர்ந்த நீத்த முன்னோர்களுக்கு நேரடியாக சென்றடையும் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாநகரின் பகுதிகளான குறுக்குத்துறை, வண்ணாரப்பேட்டை, சீவலப்பேரி தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலையிலேயே வரத் துவங்கிய பொதுமக்களை நினைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
இதே போல முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி இராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் வழிபாடுகள் சிறப்பானதாக உள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும் அதிகாலையிலேயே குவிந்த பொதுமக்கள் அருவியல் புனித நீராடி ஏள் தண்ணீர் வழிபாடு நடத்துகின்றனர்.
தை அமாவாசை போன்ற அமாவாசை காலங்களில் குடும்பத்தில் நீத்த முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். முன்னோர்களின் ஆசியில் சகல செல்வங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் தை அமாவாசை சிறப்பானதாக அமைந்துள்ளது.
செய்தியாளர்: சிவமணி, நெல்லை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.