
சீரற்ற உணவுப் பழக்கம் என்பது வழக்கத்திற்கு மாறாக நாம் குறைவாக சாப்பிடுவது அல்லது மிகுதியாக சாப்பிடுவது போன்ற நடவடிக்கைகளை குறிக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல் பருமன் ஏற்படும் என்ற அச்சத்தில் சாப்பாட்டை குறைப்பதற்கு பெயர் அனோரெக்ஸியா ஆகும். உடல் எடை அதிகரித்துவிடும் எனக் கருதி உணவுகளை குறைப்பதற்கு பெயர் நேர்வோஸா ஆகும். அதேபோல புலிமியா நெர்வோஸா என்பது உடல் எடையைத் தவிர்ப்பதற்கான உணவுக் கட்டுப்பாட்டு முறையைக் குறிக்கிறது.
ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து நாம் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது, அதன் எதிரொலியாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில பிரச்சினைகள் ஏற்படும். இவற்றை எதிர்கொள்ள மருத்துவ நிபுணரின் ஆலோசனை தேவை.
ஒவ்வொரு உணவு கட்டுப்பாடு முறைகளாலும் ஒவ்வொரு வகையான பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக 12 முதல் 25 வரை உள்பட்ட வயதில் உணவை குறைத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. அதேபோல மெனோபாஸ் அடைய இருக்கும் நடுத்தர வயது பெண்களும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றனர்.
வளர் இளம் பருவத்தில் உள்ளவர்கள் மற்றும் இளம் வயதினர் தங்கள் உடல் தோற்றம் குறித்து தாமாகவே ஒரு சிந்தனைக்கு செல்கின்றனர். உடல் குறித்து மிகுந்த கவலை அவர்களிடத்தில் தென்படுகிறது. தங்களின் சொந்த உடல் குறித்து கவலை கொள்வதால் அவர்களின் உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அளவான உடல் எடை மற்றும் கனக்கச்சிதமான உடல்வாகு போன்றவற்றை பெற வேண்டும் என்பதற்காக உணவுகளை குறைக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: பெண்களின் நுரையீரலை பாதிக்கும் தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் நோய்..! தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகள்..
இதுபோல உடல் குறித்து அதிருப்தி ஏற்படுவதுதான் சீரற்ற உணவுப் பழக்கத்திற்கு காரணம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மெனோபாஸ் அடைய இருக்கின்ற பெண்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். அதிலும், இவ்வாறு அதிக வயதை எட்டும் காலத்தில் உணவுகளை குறைத்துக் கொள்வதால், உடல் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வட அமெரிக்க மெனோபாஸ் சொஸைட்டி என்னும் அமைப்பின் சார்பில் நடுத்தர வயதுடைய பெண்களின் உணவுப் பழக்க மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர், மருத்துவர் ஸ்டீபைன் ஃபாபுயன் கூறினார், “உணவை வெறுப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. அதைப் போலவே, உடல் தோற்றம் குறித்த வருத்தம் காரணமாக நடுத்தர வயதுடைய பெண்கள் உணவு கட்டுப்பாட்டில் உள்ளனர். மெனோபாஸ் அடையும் பெண்கள், மெனோபாஸ் அடைந்த பெண்களின் உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் அச்சத்தை குறைத்துக் கொள்கின்றனர்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.