
கலை, சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த பத்ம ஸ்ரீ விருதை 77 வயதான ஏழைகளின் மருத்துவர் முனீஸ்வர் சந்திர தாவர் பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் எம்சி தாவர். இவரை அப்பகுதி மக்கள் அனைவரும் ரூ.20 டாக்டர் என்று அறிவார்கள். 1946ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த தாவர குடும்பம் பிரிவினைக்குப் பின் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. மருத்துவப் படிப்பு முடித்தவுடன் இந்திய ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது ராணுவ மருத்துவராக இருந்த இவர், 1972இல் ஜபல்பூர் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இரண்டு ரூபாய் கட்டணத்திற்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கிய மருத்துவர் தாவர், 1997க்குப் பிறகு ஐந்து ரூபாய், 2012க்குப் பிறகு 10 ரூபாய் என படிப்படியாகக் கட்டணத்தை உயர்த்தி தற்போது ரூ.20 கட்டணத்திற்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.
அதே போல், கிளினிக் நேரத்தில் தான் இவரிடம் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு தேவை ஏற்பட்டால் இவரது வீட்டிற்கு வந்தும் மருத்துவர் தாவரை அனுகி சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது குறித்து கூறும் மருத்துவர் தாவர், “தாமதமானாலும் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். மக்களின் ஆசை தான் எனக்கு இந்த விருதை தேடித்தந்துள்ளது. இவ்வளவு குறைவான கட்டணம் பெறுவது குறித்து வீட்டில் கேட்கத்தான் செய்வார்கள்.
சிகித்சா கோ சேவா கா அடல் சங்கல்ப் பனகர் மானவ் கல்யாண் கோ நை திஷா தேனே வாலே கே. எம்சி டவர் ஜி கோ பத்மஸ்ரீ சம்மான் சயனித் ஹோனே பர அனந்த் பதாயி. மாத்ரா ₹20 ஷூல்களுக்கு பிரதிதின் மரிஜோன்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். मप्र गौरवान्वित है. #மக்கள் பத்மா pic.twitter.com/koWUXfX7Dc
— சிவராஜ் சிங் சௌஹான் (@ChouhanShivraj) ஜனவரி 25, 2023
இருப்பினும் மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்று வந்த பின் கட்டணத்தை உயர்த்த மனமில்லை. பொறுமையாக தொடர்ந்து வேலை செய்தால், வெற்றி தானாக வரும். அந்த வெற்றி மதிப்பு மிக்கதாகவும் இருக்கும்” என்றார். டாக்டர் எம்சி தாவரங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது எங்கள் குடும்பத்திற்கே பெருமை என அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: