
பரபரப்பு சம்பவம்:
இந்நிலையில், பாபர் அசாம் குறித்து தற்போது பெரும் சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது, பாபர் அசாம் தனது சக வீரரின் காதலியுடன் ஆபாச வீடியோ சேட்டிங் செய்துள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாபர் அசாம், ”நீ என்னுடன் தொடர்ந்து ஆபசமாக பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்தால், உனது காதலை நான் அணியிலிருந்து நீக்க மாட்டேன்” என பாபர் அசாம் உறுதியளிக்கிறார்.
பாபருக்கு ஆதரவு:
அது எந்த வீரரின் காதலி எனத் தெரியவில்லை. இந்நிலையில், அந்த வீடியோ தோன்றுவது பாபர் அசாம், வேறு நபரின் வீடியோவை போலியாக உருவாக்கி பிரச்சினையை கிளப்பியுள்ளனர் என பாபர் அசாமுக்கு ஆதரவாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தினால் மட்டும்தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
பாபர் பதில்:
இந்நிலையில் தற்போது ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள பாபர் அசாம், ”மகிழ்ச்சியாக வாழ அதிகமானவை தேவைப்படாது” எனப் பதிவிட்டு, சிரிக்கும் இமோஜியைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், பாபர் அசாம் இந்த குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிகிறது.
இது முதல்முறையல்ல:
பாபர் அசாம் மீது இதுமாதிரியான குற்றச்சாட்டு வருவது இது முதல்முறையல்ல. ஹமிசா முக்தர் என்ற பெண்ணை பாபர் அசாம், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இதற்கு முன் குற்றச்சாட்டு இருந்தது. விசாரணை நடத்திய பிறகு, இது முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு எனத் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.