
சம்பளம் குறைப்பு
இப்படி பல காரணிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட போதிய நிதி இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 10% குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது செலவினைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

அமைச்சரவையிலும் செலவு குறைப்பு திட்டம்
இதே அமைச்சகத்தின் பிரிவில் செலவினங்களை 15% குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மட்டும் அல்ல மத்திய அமைச்சகம் மற்றும் மாநில அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து, 30 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி
இது குறித்து பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்த தேசிய சிக்கனக் குழு இது குறித்து தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடி வரும் நிலையில், பணவீக்கம், திடீர் வெள்ளம் போன்ற பாதிப்புகளால் மக்கள் கடும் சிரமங்களை சந்திக்கும் நிலையில், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது உணவு எரிபொருள், மின்சாரம் என பல துறைகளிலும் அழுத்தம் காணப்படுகின்றது.

பெரும் சிக்கல்
இந்த நிலையில் தான் சம்பள வெட்டுக்கள் என்பது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு உதவியாளர்களின் எண்ணிக்கையிலும் இந்த ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அரசு துறைகளுக்கு உயர் விலை கொண்ட வாகனங்கள், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் அமைச்சகங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை முடக்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர்லைன்ஸுக்கும் நிதி குறையலாம்
இதேபோல அரசு நிறுவனங்களுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நிதிகள், குறிப்பாக மோசமான கடன் பிரச்சனையில் இருக்கும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் என்பது பெரும் சிக்கலை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு முக்கிய அமைப்புகளுக்குமான நிதியினை குறைக்க திட்டமிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அணுகல்
பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் நிதியினை திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரைவில் ஒரு மதிப்பாய்வு குழுவினை அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தற்போது மேற்கொள்ள முடியாத சீர்திருத்தங்களை நாடு மேற்கொள்ள வேண்டும் என ஐ.எம்.எஃப் கூறியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முக்கிய நடவடிக்கைகள்
இது அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது மேற்கோண்டு விலையை அதிகரிக்கலாம். இதன் காரணமாக தேர்தல்களில் இழப்பு என பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அஞ்சுகிறார். இதற்கிடையில் எப்படியான வளர்ச்சிக்கு திரும்பி விட மாட்டோமா? என்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது.