
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜனவரி 18 ஆம் தேதி துவங்கி, ஜனவரி 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 20) மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் எந்த நாளில் என்னென்ன வைபவம் நடைபெறும், ஜனவரி 27ம் தேதி எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவம்: ஒரே நாளில் ஏழு வாகன சேவை- எப்போ நடக்க போகுது தெரியுமா?
ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன், சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேக விழா துவங்கியது. அன்று கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஜனவரி 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருமுறை ஓதலுடன் துவங்கி, விநாயகர் பூஜையுடன் வேள்வி துவங்கியது. முருக பக்தர்கள், கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு புனித நதிகளில் இருந்து புனிதநீரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
ஜனவரி 20 ஆம் தேதி நவ கோள் வழிபாடு, வேள்வி வழிபாடு ஆகியன நடைபெற்றன. ஜனவரி 21 ஆம் தேதி ஆனிரை வழிபாடு, ஏழு பரிபாடல் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 16 திருக்குடங்களில் திருமகள் எழுந்தருளச் செய்தல், 16 வகையான பொருட்கள், 16 மகளிர் வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஓம் நம சிவாய மந்திரம் சொல்வதால் என்ன பலன் கிடைக்கும் – கேள்விகளும், பதில்களும்
ஜனவரி 21 ஆம் தேதி ஆறுவகை பொருட்கள் கொண்டு வேள்வி வழிபாடு, ஜனவரி 22 ஆம் தேதி அரசமர வழிபாடு, நிலமகள் வழிபாடு, பூமி வழிபாடு ஆகியன நடைபெற உள்ளன. ஜனவரி 23 ஆம் தேதியன்று பரிவார உப தெய்வங்களில் திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது. ஜனவரி 24ல் புனிநீர் வழிபாடு, புனித நூல் வழிபாடு ஆகியன நடத்தப்பட உள்ளன.
தொடர்ந்து பலவித பூஜைகள், யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, ஜனவரி 27ம் தேதி காலை 08.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி விமானத்திற்கும், 08.45 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களின் விமானங்களின் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.