
பழநி: நாசா காலண்டரில் பழநி அருகே வித்யா மந்திர் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி அ.தித்திகாவின் ஓவியம் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக சர்வதேச அளவில் ஓவியப்போட்டிகளை நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள் காலண்டரில் இடம் பெறும். 2023-ம் ஆண்டு காலண்டருக்கான ஓவியங்களைத் தேர்வு செய்ய நடந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.