
ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் மிகவும் அரியவகை கூரல் மீன் சிக்கியது. மருத்து பயன்பாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த மீனை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர். இந்த அரியவகை கூரல் மீன் ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.