
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘பதான்’ படத்தின் முதல் சிங்கிலான ‘பேஷ்ரம் ரங்’ பாடல் அண்மையில் யூடியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இந்தப்பாடல் பலவித் சர்ச்சைகளை கிளப்பியது. இப்பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள ‘பேஷ்ரம் ரங்’ என்ற வார்த்தைகளும் சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில் நேற்றைய தினம் ‘பதான்’ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நான்கு வருட காத்திருப்புக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஷாருக்கான் இந்தப்படத்தில் ராஜேண்டாக நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் இந்தப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
Maaveeran: ‘மாவீரன்’ படம் குறித்து தீயாய் பரவும் தகவல்: படக்குழு அதிரடி அறிவிப்பு.!
இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது ‘பதான்’ படத்திற்கு உலகளவில் வேறேலெவல் ஓபனிங் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் முதல் நாளில் மட்டும் இப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தியாவில் முதல் நாளில் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தி திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தொடக்க நாளில் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக பான் இந்தியா படமாக வெளியான ‘கேஜிஎஃப் 2’ முதல் நாளில் 52 கோடி வசூலித்த நிலையில் தற்போது ‘பதான்’ பட வசூல் முறியடித்துள்ளது.
Kamal Haasan: போடு வெடிய.. ஆண்டவரின் அடுத்த பட ரிலீஸ்: வெளியான அதிரடி அறிவிப்பு.!