
திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள தமிழ்த் தொழிலாளர்களுக்கு வட வட மாநிலத் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்திச் சென்று தாக்குவது போன்ற வீடியோக்கள் வெளியான நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.