
மீனம் ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ) கிரகநிலை – ராசியில் குரு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சூரியன், சனி – விரைய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன்.
கிரகமாற்றம்: 04-02-2023அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-02-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21-02-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
பலன்கள்: கடின உழைப்பும் நேர்மையான போக்கும் கொண்ட மீன ராசியினரே… நீங்கள் புதுமையான சிந்தனைகளை உடையவர். இந்த மாதம் செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மனதெளிவு உண்டாகும். திடீர் இடமாற்றம் உண்டாகலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதேனும் குறை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள்.
குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளை மதித்து நடப்பார்கள்.
அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.
பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.
பூரட்டாதி: இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.
உத்திரட்டாதி: இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், எனினும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.
ரேவதி: இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 | அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31