
பைக் சாகச பிரியர்கள் பலர் சாலை விதிகளை மீறி சாகசங்கள் செய்து அதை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறு கெத்து காட்டுகிறேன் எனக் கூறி அவர்கள் செய்யும் சேட்டைகள் பின்னர் அவர்களுக்கே மோசமான பின்விளைவுகளைத் தருவதும் உண்டு. அப்படித்தான் பைக் பிரியர் ஒருவர் புல்லட் பைக்கில் ரீல்ஸ் செய்து போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நூர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் என்ற இளைஞர். ரீல்ஸ் வீடியோ செய்வதை தனது ஹாபியாக கொண்ட இவர், தனது நண்பரான அபிஷேக் குமார் என்பவரின் புல்லட் வண்டியை எடுத்துக்கொண்டு டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் ரீல்ஸ் செய்து வந்துள்ளார்.
அதன்படி, ஒரு கையில் புல்லட் வண்டியை பிடித்துக்கொண்டு ஓட்டிய அனுஜ் தன்னிடம் இருந்த பீர் பாட்டில் ஒன்றை மறுக்கையில் எடுத்தார். பின்னர் அந்த பீரை கெத்தாக குடித்துக்கொண்டே ஒற்றைக் கையில் வண்டி ஓட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை இணையத்தில் அப்லோட் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், காவல்துறையினரின் பார்வையில் சிக்கியது. வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன போலீசார் அனுஜின் தகவல்களை சேகரித்து அவரை கைது செய்தனர்.அத்துடன் புல்லட் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
बुलेट है कोई नहीं, सब र देंगे, लेकिन बिय हुए बिन .. हेलमेट .. बुलेट चल तो !! ील के के में में 31000 ुपए क च आ न न …. झेलो झेलो .. महंगी पड़ी ील तो तो भी नहीं ह होग ट से को. pic.twitter.com/cSEUMsWGfx
— விவேக் கே. திரிபாதி (@meevkt) ஜனவரி 20, 2023
ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியது, அதிவேகமாக வண்டி ஓட்டியது, வண்டி ஓட்டிக்கொண்டே குடித்தது என பல பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.31,000 அபராதம் விதித்துள்ளனர்.சோசியல் மீடியாவில் மாஸ் காட்டும் ஆர்வத்தில் ரீல்ஸ் வீடியோ போட்ட அனுஜ் அவர் மூலமாக போலீசிடம் சிக்கியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: