
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சார்பில் பொங்கல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சிலர் வாழை இலையில் விருந்து உண்பதுபோல் வெளியான வீடியோ பொய்யாகவும் அது கனடா நாட்டில் எடுக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.
அலுவலகத்தில் வெளிநாட்டவர்கள் சிலர், வாழை இலையில் விருந்து உண்பதுபோல் வீடியோ ஒன்று வைரலானது. அது பிரிட்டன் நாட்டு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ எனவும் பகிரப்பட்டது.
இந்த வீடியோ இங்கிலாந்து நாட்டில் எடுக்கப்படவில்லை, கனடா நாட்டின் வாட்டர்லூ நகரில் எடுக்கப்பட்டது. தமிழ் கலாச்சார சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற விருந்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அந்த அமைப்பு வாட்டர்லூவின் மேயர், கவுன்சிலர்கள், போலீசார் மற்றும் பணியாளர்களுடன் பொங்கல் விருந்து என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வீடியோவை எடுத்து தனியே பகிர்ந்தார், இது பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது எனவும் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் ஏற்பாடு செய்து விருந்து எனவும் குறிப்பிட்டனர். இதனை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்திருந்தனர். மாநிலங்களவை உறுப்பினர் சோனால் மன்சிங் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் உண்மைதன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: