
ஏழைகள் தான் அதிக ஜிஎஸ்டி வரி
அறிக்கையின் படி, மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரு பங்கு 64.3%, குறைவான வருமானம் உடைய 50% ஏழை மக்களிடம் இருந்து வருகிறது. இதே மூன்றில் ஒரு பங்கு 40% நடுத்தர மக்களிடம் இருந்தும், மிகப்பெரிய பெரிய 10% பணக்காரர்களிடம் இருந்தும் 3 – 4% மட்டுமே கிடைக்கிறதாம். மொத்தத்தில் ஏழை மக்கள் தான் பெரும் தொகையை செலுத்துகின்றார்கள்.

ஜிஎஸ்டி அதிகரிக்கலாம்
2021 – 22ல் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டியானது 14.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் தற்போதைய நிலவரப்படி 2022 – 23ம் நிதியாண்டில் 18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழைகள் அதிகம்
ஆக்ஸ்பாம் அறிக்கையானது, வருமானக் குழுவின் கீழ் 50% பேர், நடுத்தர மக்கள் 40% பேர் மற்றும் பணக்காரர்கள் 10% மொத்த வருமானத்தை மறைமுக வரிகளுக்கு செலவிடுகிறார்கள். கீழ் மட்டத்தில் உள்ள 50% மக்கள் தான், 10% பணக்காரர்களுடன் ஒப்பிடும்போது, மறைமுக வரி விதிப்பில் 6 மடங்கு அதிகம் செலுத்துகின்றனர்.

6.7% உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள்
மேற்கட்ட 50% ஏழை மக்கள் தங்கள் வருமானத்தில் 6.7% வருமானத்தை உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களான வரியாக செலவிடுகின்றன. இதே நடுத்தர மக்கள் 40% பேர் 3.3% உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களாக தங்களது வருமானத்தை செலவிடுகின்றார்களாம். இதே செல்வந்தர்களில் 10% பேர் வெறும் 0.4% மட்டுமே உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்காக செலவிடுகின்றன.

வரியை குறைக்கணும்
பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் செலவு செய்யும் உணவு பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது வருவாய் ஈட்டுவதற்கு வழிவகுக்கலாம். ஆனால் இது ஒரு முற்போக்கான ஒன்று. இது ஏழைகளின் சுமையை மேலும் கூட்டலாம். ஆக ஏழை மக்களின் சுமையை குறைக்க வரியை குறைக்க வேண்டும்.

பணக்காரர்களுக்கு வரி விதிக்கலாம்
மாறாக பில்லியனர்களுக்கு வரி அதிகரிக்க வேண்டும் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த செலவில் 3% சொத்து வரி விதித்தால், இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார இயக்கத்திற்கு, தற்போதைய ஒதுக்கீடான 37,800 கோடி ரூபாய் நிதியை 5 ஆண்டுகளுக்கு அளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

நன்றாக இருக்கும்
உண்மையில் போன்ற அறிவிப்புகள் வரவிருக்கும் பட்ஜெட்டில் வந்தால் நன்றாக இருக்கும் எனலாம். சில நாடுகள் அரசின் வருவாயினை அதிகரிக்க பணக்காரர்களுக்கு என கூடுதல் வரியினை விதிக்கின்றன. அதுபோன்று விதிப்பதன் மூலம் பின் தங்கியுள்ள மக்களுக்கு அதனால் உதவ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.