
Pou Chen Corp நிறுவனம்
Pou Chen Corp நிறுவனம் முன்னணி காலணி பிராண்டுகளாக Nike, Adidas, Asics, New Balance, Timberland மற்றும் Salomon பிராண்டுகளின் முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளராக (OEM / ODM) ஆக உள்ளது. Pou Chen Corp நிறுவனம் வருடத்திற்கு 300 மில்லியன் காலணிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இதனால் எந்தப் பிராண்டுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் தயாரிக்க முடியும்.

தைவான்
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் காலணி உற்பத்தி நிறுவனமான Pou Chen Corp தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் குறித்து இறுதி முடிவு செய்யும் நிலையில் உள்ளது.

திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி
இதேவேளையில் Pou Chen Corp தமிழ்நாட்டு அரசுடன் பல்வேறு சலுகைகள் குறித்த இறுதி முடிவுகளை எடுத்து ஒப்பந்தம் செய்யும் கட்டத்தில் உள்ளது. இப்புதிய தொழிற்சாலை திருச்சி, விழுப்புரம் மற்றும் துறைமுக நகரமான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிலங்களை தமிழ்நாடு அரசு முன்வைத்த நிலையில் Pou Chen Corp ஆய்வு செய்து வருகிறது.

தோல் மற்றும் காலணி கொள்கை
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தோல் மற்றும் காலணி கொள்கையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20-25 உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

50 கிமீ சுற்றளவு
மேலும் ஒரு காலணி தொழிற்சாலைக்கும் மற்றொரு காலணி தொழிற்சாலைக்கும் இடையில் உள்ள குறைந்தபட்சம் 50 கிமீ சுற்றளவு இருக்க வேண்டும் என்பதை அடிப்படை திட்டமாகக் கொண்டு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு காலணி தொழிற்சாலைகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு
இந்த 50 கிலோமீட்டர் இடைவெளி மூலம் தமிழ்நாட்டில் பல இடங்கள் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளன. இதேபோல் வேலைவாய்ப்பு ஒரு மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் பல மாவட்ட மக்களுக்கும் பிரித்து அளிக்க முடியும். காலணி தொழிற்சாலைகளில் மட்டும் 15000 முதல் 20000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய துணை நிறுவனம்
தமிழ்நாட்டில் காலணி தொழிற்சாலையின் திட்டங்களின் ஒரு பகுதியாக, Pou Chen Group நிறுவனம் டிசம்பர் 2022 இல் இந்தியாவுக்கான கிளை நிறுவனமாக ஹை குளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.