
பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பிரதமர் மோடியின் அரசியல் திட்டங்கள் மற்றும் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பானது. இதில் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு பங்கு குஜராத் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டது சர்ச்சை எழுந்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்த ஆவணப்படம் ஆங்கிலேயர் ஆதிக்க மனோபாவத்தை காட்டுவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி விமர்சித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஆவணப்படத்தின் காட்சிகளை பகிரும் டிவிட்டர் லிங்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.